முஸ்லிம் பெண் பலியான கொழும்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர செய்தி.

டுபாய் நாட்டில் இருக்கும் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மதூஷ் என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் மனைவியே நேற்று மாலை 6 மணியளவில் மாளிகாவத்தை ஜும்ஆ சந்தியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இனந்தெரியாதோரினால் இவர் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளார். இவர் மீது 9 மி.மீ. ரக துப்பாக்கியினாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்றைய தேசிய பத்திரிகையொன்று அறிவித்துள்ளது.


துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாளிகாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய மொஹமட் மும்மீர் சித்தி ரினேஷா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மாளிகாவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.