தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பாக ஏஞ்சலோ மெத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், திக்வெல்ல 43 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி தென்னாபிரிக்க அணிக்கு 300 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.