லங்கா IOC நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது.

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், டீசலின் விலை 9 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 146 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இயுரோ 04 வகை பெற்றோல் 158 ரூபாவாகவும், இயுரோ 03 வகை பெற்றோல் 149 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் (இயுரோ 04) புதிய விலை 129 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா மைல் டீசல் 122 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலை நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.