இலங்கையில் மரண தண்டனை அமுலுக்கு வந்தால் GSP+க்கு ஆபத்து!

இலங்கையில், மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி சலுகையை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம், கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குதல் தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனையை செயற்படுத்துவதை நிறுத்தக் கோரி ஐரோப்பிய சங்கமும் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, கனடா ஆகிய நாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியிருந்தது.

ஜீ.எஸ்.பி சலுகைகள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டவரைவுகளுக்கு ஏற்ப அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய சங்கம் கொடுக்கும் வரி சலுகையாகும்.

மனித உரிமைகள் மீறல் மற்றும் பல குற்றச்சாட்டுக்களினால் 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைகள் இடைநிறுத்தப்பட்டன. எனினும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், அந்த சலுகைகள் மீண்டும் கடந்த மே மாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரி சலுகைகளினால் ஆண்டுதோறும் இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.