ஜனாதிபதியின் கடுமையான தீர்மானம்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், சிறையில் இருந்தவாரே போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ள கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் பத்திரத்தில் ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி - கெட்டம்பே விளையாட்டரங்கில் நேற்று(11) இடம்பெற்ற போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம் என்ற வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதிகளவில் குரல்கொடுத்தது, புகையிலை பொருட்கள் மற்றும் மதுசாரங்களுக்கு எதிராவே.

அந்த வகையில், போதைப்பொருட்களின் பாவனைகள் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த சில காலங்களில் போதைப்பொருள் பாவனை வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு விரைவான தண்டனைகள் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

அவ்வாறு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தநிலையிலேயே, நாட்டின் எதிர்கால சிறார்களின் நலனை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget