இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு.

எரிபொருட்களின் விலைகளில் கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்பை அவ்வாறே அமுலாக்க ஜனாதிபதியும், நிதி அமைச்சரும் தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நிதி அமைச்சருடன் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்படி, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் 92 ஒக்டேய்ன் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டேய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றில் விலை 9 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் புதிய விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோலின் புதிய விலை 155 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

அத்துடன் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.