சர்ச்சைக்குரிய கருத்துக்கான காரணத்தை வெளியிட்டார் விஜயகலா மகேஸ்வரன்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதே தமது இலக்கு என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இக் கருத்து அண்மைக்காலமாக பல்வேறு மட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சி நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது.

இந்த குழு விஜயக்கலா மகேஸ்வரனிடம் விளக்கம் கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பி இருந்ததுடன், இதற்கு 20ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கி இருந்தது.

எனினும் நேற்று முன்தினம் மாலை விஜயகலா மகேஸ்வரன் தமது சட்டத்தரணி ஊடாக விளக்கக் கடிதத்தை குறித்த குழுவிற்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நிலவுகின்ற நிகழ்கால பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் தொடர்பில் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தமது கருத்து அமைந்திருந்ததாக அவர் தமது விளக்கக்கடிதத்தில் கூறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.