பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் ஓர் அதிரடி அறிவிப்பு.

தவணை பரீட்சைகளின் பெறுபேறுகளை பாடசாலை தவணை விடுமுறைக்கு முன்னதாக வழங்குமாறு கல்வியமைச்சு மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால் விடுக்கப்பட்டுள்ளது.

தவணை பரீட்சைகளின் பெறுபேறுகள் தாமதமாவதன் காரணமாக மாணவர்களின் கல்வி தகமை மற்றும் முன்னேற்றம் என்பவற்றை அறிந்து கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முடியாதுள்ளது.

இதன்காரணமாக பெற்றோர்களும் மாணவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

குறித்த விடயங்களை கருத்திற் கொண்டே கல்வியமைச்சின் செயலாளர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget