இவ்வருடத்துக்கான இலங்கையின் முதலாவது ஹஜ் குழுவினர் எதிர்வரும் 24 ஆம் திகதி பயணம்.

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­ள­வுள்ள 3000 யாத்­திரிகர்களில் 58 பேர் அடங்கிய முதலாவது குழுவினர் எதிர்வரும் 24 ஆம் திகதி சவூதி அரேபியா­வுக்குப் பயணிக்கவுள்ளனர்.

300 பயணிகள் அடங்கி­ய இரண்டாவது தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி சவூதி அரேபியா­வுக்குப் பயணிக்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்­பாட்டலுவல்கள் திணைக்க­ளத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநா­யக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஹஜ் யாத்­திரிகர்களை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முஸ்லிம் சமய பண்பாட்ட­லுவல்கள் திணைக்கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் உட்பட குழுவினர் வழியனுப்பி வைக்கவுள்ளனர்.

இதேவேளை ஜித்தாவிலுள்ள இலங்கை கவுன்சியுலர் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவில் பயன்ப­டுத்துவதற்காக 3000 சிம் அட்டை­களை அனுப்பி வைத்துள்ளார். இச் சிம் அட்டைகள் ஹஜ் முக­வர்கள் ஊடாக ஹஜ் யாத்திரிகர்க­ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.