21வது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன்.

32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ், குரோஷிய அணிகள் இறுதிப்போட்டியில் இன்று (15) மோதின.

இன்றைய போட்டியின் போது பிரான்ஸ் அணி 4 கோல்களையும் குரோஷிய அணி 2 கோல்களையும் போட்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன்மூலம் சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

போட்டி தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் 8-வது நிமிடத்தில் குரோசியாவிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை எளிதாக பிரான்ஸ் வீரர்கள் முறியடித்தனர்.

17 வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. இப்போட்டி மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்றது.

21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமானது.

இவ்விரு அணிகளும் உலக கிண்ணத்தில் இதற்கு முன்பு 1998 ஆம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது.

அப்போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.