அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது...

தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று பிற்பகல் வரை கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் சுமார் 3 லட்சம் அஞ்சல்களும், ஏனைய பிராந்திய அஞ்சல் நிலையங்களில் சுமார் 10 லட்சம் அஞ்சல்களும் தேக்கமடைந்துள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு முறைமை மற்றும் அஞ்சல் நிலைய பதில் உப அதிபர்களின் பணியை உறுதிப்படுத்துமாறும் கோரி அஞ்சல் பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பு குறித்து அதிகாரிகளிடமிருந்து இன்றைய தினம் தீர்வொன்றை எதிர்ப்பார்ப்பதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இந்தப் பணிப்புறக்கணிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அஞ்சல்மா அதிபர் ரோஹண அபேரத்ன,

அமைச்சரவைப் பத்திரம் குறித்து கடந்த முதலாம் திகதி அஞ்சல் சேவைகள் அமைச்சருக்கும் குறித்த தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, இரண்டு வாரங்களுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதியளிக்கப்பட்டபோ குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக அஞ்சல் சேவையை முன்னெடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அஞ்சமா அதிபர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget