இன்றும் அமைச்சரவையில் மாற்றம்...

இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை 9.00 மணியளவில் இந்த சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர், பிரதி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதன்படி, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா, தொழிற்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கை, மாநகர மற்றும் மேல்மாகாண நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளுக்காகவும், மேலும் ஒரு அமைச்சுக்காகவும் பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget