அஞ்சல் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு.

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.

இன்று(19) சேவைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு தினங்களாக பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி கடந்த 11ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இதனிடையே, அஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக அஞ்சல் திணைக்களத்திற்கு 125 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.