தலைபிறை சர்ச்சைக்கு கலந்துரையாடலின் பல தீர்மானங்கள்.

தலைப்பிறை தீர்மானிக்கும் பொறுப்பு தொடர்ந்தும் பெரியபள்ளிவாசல் பிறைக்குழுவிடமே இருக்கும் என்றும் தலைபிறை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹலீம் தலைமையில் விசேட உயர்மட்ட குழுவென்றும் நேற்று ஸ்தாபிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, வக்பு சபை, ஜாமிஆ நளீமிய்யா, வானிலை ஆய்வு நிலைய உத்தியோகத்தர் உட்பட 7 பேர் கொண்ட விசேட ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை கொண்ட செயற்குழுவொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அவ்வாறே இவ்வளவு காலமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இருந்து பணிப்பாளர் மாத்திரமே தலைப்பிறையை தீர்மானிக்கும் குழுவில் இணைந்திருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில் திணைக்களத்தில் இருந்து மேலும் நால்வர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

இதேவேளை, தலைப்பிறையை தீர்மானிப்பதில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த ஒழுங்குகளில் மாற்றம் செய்ய உள்ளதுடன் தலைப்பிறையை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்திறன் மிக்கதும், நம்பகத்தன்மையுடையதுமான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தலைப்பிறை சர்ச்சை தொடர்பாக நாம் விரிவாக ஆராய்ந்தோம். குறிப்பாக தலைப்பிறை தென்பட்டதாக பொது மக்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவியது. இது தொடர்பாக ஜம்மியத்துல் உலமா, பெரியபள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் பண்பாட்டு திணைக்களம் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் சிறந்த சேவையொன்றை வழங்கும் நோக்கத்தில் நேற்றை தினம் பிறைக்குழுவுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.

இங்கு தலைப்பிறை தொடர்பாக சிறந்த விளக்கங்களை தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் பிறை தொடர்பில் எவ்வித பிரச்சினையும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படாத வகையில் தலைப்பிறையை தீர்மானிக்கும் பொறுப்பு தொடர்ந்தும் கொழும்பு பெரியபள்ளிவாசல் பிறைக்குழுவிடமே இருக்கும். அவர்களின் அனுபவம் மற்றும் நீண்டகால சேவை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

உடனடியாக பிறைக்குழுவை கலைக்க வேண்டிய தேவை தற்போது இல்லை. ஆனால், உயர்மட்டக் குழு மற்றும் செயற்குழுவின் மேற்பார்வையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஏழு பேர் கொண்ட குழு மற்றும் செயற்குழு ஆகியன எதிர்காலத்தில் சிறப்பான சேவையை வழங்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.