குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கான தண்டனை இன்று.

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கான தண்டனை இன்று(14) ஹோமாகம நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தண்டனை குறித்த தீர்ப்பே இன்று ஹோமாகம நீதிவான் உதேஷ் ரணதுங்கவினால் எழுப்படவுள்ளது.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் கைவிரல் ரேகை முன்னதாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் எல்னெலிகொட தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே கலகொடஅத்தே ஞானசார தேரர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.