பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள அஞ்சல் தொழிற்சங்க முன்னணி.

தமது பிரச்சினைக்கு அதிகாரிகளினால் தீர்வு பெற்றுக்கொடுக்காததன் காரணத்தினால் நாளைய தினம் கொழும்பில் கூடி பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தமது போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்வதாக அதன் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி கடந்த 11ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், இயன்றளவு விரைவாக சேவைக்கு திரும்புமாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன நேற்று கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget