பசு வதைக்கு எதிராக யாழில் உண்ணாவிரதப் போராட்டம்.

பசு வதைக்கு எதிராக இந்து மற்றும் பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

‘பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது சாவகச்சேரி பிரதேச செயலக பிரிக்குட்பட்ட பகுதிகளில் பசுவதைகள் இடம்பெறுவதாகவும் அதை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மாட்டிறைச்சிக் கடையில் மக்களின் தேவைக்கதிகமாக மாடுகள் அதிகளவில் வெட்டப்பட்டு வெளி இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்.நாகவிகாரை விகாராதிபதி மிகஹஜன்துரே விமலதேரர், நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.