மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..

எதிர்வரும் தினங்களில் மழையுடனான காலநிலை குறைவடைய கூடும் என்பதுடன் தென்மேற்கு பகுதிகளில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மேல் மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் இன்று மாலை மழை பொழிய கூடும் என அத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கு விடுக்கபட்ட மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரது ஒத்துழைப்புடன் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

20 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மழையுடன் கூடிய வானிலை காரணமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில், 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 ஆயிரத்து 553 பேர் 265 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.