சீரற்ற காலநிலையால் மக்கள் தொடந்தும் பாதிப்பு.

மழையுடன் சரிந்து வீழ்ந்த மண் மேட்டால் பாதிக்கப்பட்டிருந்த கேகாலை – புளத்கோபிட்டிய வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இன்று அதிகாலை முதல் அந்த வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனுடன் கண்டி – அனிவத்த பிம்கேய அருகில் ஏற்பட்ட கள் புரள்வால் அதன் ஊடான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மழையுடன் உடவளவை நீர்தேக்கத்தில் நேற்று திறக்கப்பட்ட மூன்று அவசர கதவுகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இதேவேளை மின்னல் தாக்கி 14 வயதான பாடசாலை மாணவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – சிவபுரம் பகுதியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனுடன் மின்னல் தாக்கத்தால் மாவனெல்ல நகரில் அமைந்துள்ள வங்கியில் நேற்று மாலை தீப்பரவியுள்ளது.

பெய்த கடும் மழையால் மாவனெல்ல நகரின் தாழ் நிலப்பகுதிகள் சில நீரில் மூழ்கியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget