உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று.

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார ஒழுங்கமைப்பு அங்கத்துவ நாடுகளால், 1987ம் ஆண்டு, இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.

புகையிலை பாவனையில் இருந்து இதயத்தை பாதுகாக்க, இதயபூர்வமாக செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான புகையிலை எதிர்ப்பு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

புகையிலை உற்பத்திப் பொருட்களை பாவிப்பதன் மூலம், மனிதனது ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் குறைவடைவதாக உலக சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதன் காரணமாக வருடாந்தம் உலகம் முழுவுதும் 7 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

2030ம் ஆண்டாகும் போது இந்த மரண வீதம் 8 மில்லியனாக அதிகரிக்கவுள்ளது.

இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையின் காரணமாக, வருடாந்தம் 15 ஆயிரம் பேர் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாவனையால் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, வருடாந்தம் 7500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்ட 17 லட்சத்து 25 ஆயிரம் பேர் வரையில் புகையிலை உற்பத்தி பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

புகையிலை பாவைனயால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதனால் இடம்பெறும் மரணங்களை குறைத்துக் கொள்ள இந்த நாளின் அனுஷ்டிப்பு மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget