தாழ்நிலப்பகுதி மக்களுக்கு அவதான எச்சரிக்கை.

நிலவும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக களுகங்கை , கிங்கங்கை மற்றும் அத்தனகலை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுகங்கை மில்லகந்த பிரதேசத்தில் வெள்ளப்பெரு ஏற்பட வாய்ப்புள்ளதால் மதுராவல , ஹொரணை , புளத்சிங்கள,இங்கிரிய மற்றும் பாலிந்த நுவர போன்ற பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கிங்கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வௌ்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் பத்தேகம , போபே -போத்தல , நாகொடை , நியாகம , தவலம மற்றும் நெலுவ போன்ற பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , அத்தனகலை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் , நீர்கொழும்பு , ஜாஹெல , மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்த தாழ்நிலத்தில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget