புகையிரத தொழிநுட்பவியலாளர்கள் இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்.

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.

இன்று(29) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என குறித்த குழு தலைவர் பீ.சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

இதே வேளை புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று (29) மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்கள் எற்பட கூடாது என்பதை கருத்திற்கொண்டு அனைத்து புகையிரத சேவை ஊழியர்களது விடுமுறைகளையும் இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முடிவு செய்த பிரகாரம் இன்று(29) பிற்பகல் 4 மணியில் இருந்து தமது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.