எவரெஸ்டில் ஏறிய 2ஆவது இலங்கையராக யோஹான் பீரிஸ் பதிவு.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராக யோஹான் பீரிஸ் பதிவானார்.

அத்துடன் இலங்கை சார்பில் இந்த இலக்கை எய்திய முதலாவது ஆண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேபாள நேரப்படி இன்று காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்.

இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் ஜயந்தி குரு உத்தும்பால எவரெஸ்டில் ஏறியமையே இலங்கையர் ஒருவர் படைத்த சாதனையாக இருந்தது.

எவ்வாறாயினும் கடந்த வருடத்தில் உத்தும்பாலவுடன் யோஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி செய்திருந்த போதும் அவர் எடுத்து சென்ற ஒட்சிசன் தாங்கியில் கசிவு ஏற்பட்டதனால் அப்போது அவரால் அந்த பயணத்தில் இணைந்து கொள்ள வாய்ப்பு கிட்டவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

யோஹான் பீரிஸ் இரண்டாவது தடவையிலேயே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தது சிறப்பம்சமாகும்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget