திஹாரி, மல்வத்தை நிப்போன் செரமிக் கடையை எரித்தவர் அதன் உரிமையாளரே..

திஹாரி, கொழும்பு - கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையான சம்ப வத்தில் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் விற்பனை நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக குறித்த கடை முற்றாக எரிந்து சேதமாகியது.

இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும் தீ மூட்டப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப் படும் 'லைட்டர்' ஒன்றும் பொலிஸாரால் கண்டெ டுக்கப்பட்டு இவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய கடைக்கு தீ மூட்டியதாக கருதப்படும் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காயம் டைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களுக்கமைய கடை உரிமையாளரே காப்புறுதிப் பணத்தைப் பெறும் நோக்கில் 2 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தன்னை அவரது கடையை எரிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே நேற்றைய தினம் கடையின் உரிமையாளர் நிட்டம்புவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget