சற்றுமுன் திடீரென ஜனாதிபதியை சந்தித்த பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான சந்திப்பொன்று சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் , ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை , இந்த சந்திப்பை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget