கண்டி சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கைது.

கண்டிக் கலவரத்தின் போது பூஜாப்பிட்டி, அம்பதென்ன முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சிப்பாய்கள் இருவரும் தற்போது இராணுவத்தில் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிப்பாய் புத்தளம் சின்னவில்லு வத்தையிலுள்ள 143 ஆவது படையணி தலைமையகத்தில் கடமையில் உள்ளவர் எனவும், மற்றவர் இயந்திர துறை படையணியில் கெகிராவ தம்புலுபல்வில பயிற்சிப் பாடசாலையில் சேவையாற்றும் ஒருவர் எனவும் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர கூறியுள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 10 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சீ.சீ.டி.வி. காட்சிகள் என்பவற்றை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget