ஒரு முஸ்லிம் பெண் உட்பட சுற்றுலா சென்ற 5 பேர் பரிதாப மரணம்!

கண்டி – பன்வில - ஹூலுகங்கை ஆற்றிற்கு நீராட சென்ற 5 பேர் நேற்று(07) மாலை நீரில் மூழ்கி பலியாகினர். அவர்களுல் நால்வருடை சடலங்களும் பின்னர் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கடுவளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர்கள், சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு கண்டி பிரதேசத்திற்கு வந்தவர்கள் இங்கு நீராடச் சென்றுள்ளதாகவும் திடீரென ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக இவர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மரணித்தவர்களில் மூன்று பெண்களும் இரு ஆண்களும் அடங்குவர்.

கண்டி அம்பிட்டிவை சேர்ந்த சிரிஸ் அன்திரியா(26), மொரட்டுவையச் சேர்ந்த கஜனா சிவநாதன்(26), இரத்மலானையை சேர்ந்த  எஸ். ஹுஸ்னியா(23), கனேமுல்லைய சேர்ந்த மஞ்சுல சுசில்(30), கிரிந்திவெலயை சேர்ந்த பிரியங்க பிரேம குமார ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளதாக பொலீஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களுடைய சடலங்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பன்விலை பொலீஸார் மேற்கொண்டு வருகிறன்மை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget