ஏமனில் நடந்த திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் 20 பேர் பலி

ஏமன், ஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலியாகினர்.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் பலியாகின்றனர்


சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஏமனில் ஹஜ்ஜாவின் மாகாணத்தில் உள்ள ஹவுத்தி-கட்டுப்பாட்டிலுள்ள பானி கியாஸ் பகுதி சானாவில் திருமண விழா நடைபெற்றது. இந்த நிலையில் சவுதி கூட்டுப்படைகள் திருமண விழாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.