இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 47 வது நம்பிக்கையில்லா பிரேரணை சுமார் 12 மணித்தியால விவாதங்களின் பின்னர் வாக்களிப்புக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
இலங்கை வரலாற்றின் இதுவரை 47 நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அரசாங்கத்திற்கு ஆதரவாக 23 நம்பிக்கையில்லா பிரேரணைகளும், அமைச்சர்களுக்கு எதிராக 13 நம்பிக்கையில்லா பிரரேரணைகளும் சபாநயகர் மற்றும் பிரதி சபாநயகருக்கு எதிராக ஒரு பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளன.
1957 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக அத்தனகலை தேர்தல் தொகுதியில் போடடியிட்டு வெற்றியடைந்த பிரதமர் S.W.R.D பண்டார நாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையே இலங்கை வரலாற்றில் பிரதமர் ஒருவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா பிரேரணையாகும்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணைக்கு ஆதரவாக மற்றும் எதிராக அளிக்கப்படும் வாக்குகளின் விபரங்களை இரவு 09.30 மணிக்கு எமது தாய்Tv வாயிலாக வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.
Post a Comment