ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய அனர்த்தம்; 05 பேர் பலி.

ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பிரதேச மக்கள் சிலர் நச்சு வாயுவை சுவாசித்துள்ளதால் பாதிப்படைந்துள்ளதுடன், பாதிப்படைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக ஹொரணை மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று மதியம் 01.20 மணயளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget