சசிகலா மனிதாபிமானம் அற்றவர்களுக்கு ஒரு உதாரணம்: தீபா


சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தீபா. அப்போது சசிகலா அரசியலில் காய் நகரத்துவதற்காகவே இப்போது பரோலில் வந்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தனது தரப்பு மனுவை தீபா திரும்பப்பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, தான் எந்த மனுவையும் திரும்பப் பெறவில்லை என்று விளக்கமளித்தார். மேலும் தங்கள் சார்பில், அக்டோபர் 13 ஆம் தேதி கூடுதல் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

சசிகலாவின் பரோல் பற்றி பேசிய தீபா, சசிகலாவிற்கு கணவர் மீதெல்லாம் பாசமெல்லாம் எதுவுமில்லை. மனிதாபிமானமற்றவர்களுக்கு உதாரணமே சசிகலாதான். தன் அத்தை மருத்துவமனையில் இருந்தபோது, தன்னைச் சந்திக்க விடாமல் வெளியே நிற்க வைத்தார். தற்போது, அரசியல் நோக்கத்திற்காக மீண்டும் பரோலில் வந்துள்ளார் என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை செய்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget