கணவரை சந்தித்து கண்ணீருடன் உடல் நலம் விசாரித்தார் சசிகலா


பரோலில் வெளிவந்துள்ள சசிகலா, இன்று தன் கணவர் நடராசன் அனுமதிக்கப்பட்டுள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலத்தை விசாரித்தார்.

5 நாட்களில் பரோலில் வெளிவந்துள்ள சசிகலா, இன்று தன் கணவர் நடராசன் அனுமதிக்கப்பட்டுள்ள குளோபல் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலத்தை விசாரித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடும் உடல்நலக் குறைவுடன் உள்ள அவரது கணவர் நடராஜனை காண 15 நாட்கள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் விண்ணப்பித்து இருந்தார். போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி முதலில் சிறைத்துறை அம்மனுவை முதலில் நிராகரித்தது.

இதன்பின், நடராஜனின் உடல்நிலை குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்து சசிகலா மீண்டும் பரோலுக்கு விண்ணப்பித்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கர்நாடக சிறைத்துறை, பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக சென்னை காவல்துறையிடம் மின்னஞ்சல் மூலம் கருத்து கேட்டிருந்தது. இதற்கு, சென்னை காவல்துறையினரும், நிபந்தனையுடன் கூடிய பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பினர்.

தமிழக போலீஸாரின் நிபந்தனைகள் குறித்து விவாதித்த பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகள், வெள்ளிக்கிழமை சசிகலாவுக்கு ஐந்து நாட்கள் பரோல் அளித்தனர். இதைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, காரிலேயே சென்னைக்கு வந்தார். அவரை டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். வழிநெடுகிலும், அவரை தொண்டர்கள் வரவேற்று ஆர்ப்பரித்தனர்.

5 நாட்கள் பரோலில் வெளிவந்திருக்கும் சசிகலாவுக்கு தங்கும் இடம் மற்றும் கணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டும், பார்வையாளர்களை சந்திக்கக்கூடாது, அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது, ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல கடுமையான கெடுபிடிகள் உள்ளன.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் சசிகலா தங்கினார். இதையடுத்து, சனிக்கிழமை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க சசிகலா வந்தார். அப்போது, மருத்துவமனையில் அவரது தொண்டர்கள் சூழ்ந்துகொள்ள அங்கு பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் சிரமமடைந்தனர். அவரது வருகையையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனைக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் இரண்டு கட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது. நடராஜனை சந்திக்க சசிகலாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், மற்ற உறவினர்கள் மருத்துவமனை வெளியிலேயே நின்றிருந்தனர். இந்நிலையில், சசிகலா, நடராஜனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இதனிடையே, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நடராஜனின் உடல்நிலை தேறி வருவதாகவும், டராக்கியோஸ்டமி முறையில் அவருக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும், அம்மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget