தூக்கிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்: காதல் மனைவியின் உடலை கூட பார்க்காத கணவர்


புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேல்- அருணாதேவி தம்பதியின் மகள் கங்கா (19).

இவருக்கும் அவரின் உறவினர் பாலுவுக்கும் (21) காதல் இருந்து வந்த நிலையில் கடந்த யூன் மாதம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி கங்காவை, பாலு அவர் தாய் வீட்டில் விட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் கங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விசாரித்து வந்த நிலையில், கங்காவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை நடந்த மருத்துவமனை வாசலில் குவிந்த கங்காவின் உறவினர்கள், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், கங்கா இறந்தது குறித்து பாலுவுக்கு தகவல் கொடுத்தும் அவர் கங்காவின் உடலை பார்க்கவரவில்லை.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget