நீதிமன்றம் விதித்த தடையால் தோல்வியடைந்த நாமல்!


நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோர் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவிருந்தனர்.

எனினும் அவர்களது குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தினை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வழங்கவுள்ளதாக கூறி, இதனை கண்டிக்கும் வகையிலேயே ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினால் குறித்த ஆர்ப்பாட்டமானது நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஜனவரி 7ஆம் திகதியும் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு, அது அரசியல் ரீதியில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget