மனைவியுடன் கள்ளத்தொடர்பு ; மனைவியான குஞ்சுமோளை வைத்து கள்ளக்காதலனை கொலை செய்த கணவன்

மனைவியுடன் தினமும் உறவில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதலனை மனைவியின் உதவியால் தலையை துண்டித்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோட்டயம் மாவட்டத்தை அடுத்துள்ள புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவர் தனது வீட்டின் முன்பு கிடந்த குப்பைகளை, அருகே உள்ள இடத்தில் குழி தோண்டி புதைக்க சென்றுள்ளார். அப்போது அங்கு கிடந்த சாக்குமூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிஜூ, இதுகுறித்து புதுப்பள்ளி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன்பேரில் புதுப்பள்ளி மாவட்ட பொலிஸ் ஆணையாளர் கருப்பசாமி தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, துர்நாற்றம் வீசிய சாக்குமூட்டையை பிரித்து பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்டு அழுகி நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் பிதேர பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இனந்தெரியாதவர்கள் கொலை செய்து தலையை துண்டித்து விட்டு, உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசி சென்றுள்ளமை தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 

இதன்போது கொலை செய்யப்பட்டவர் கோட்டயத்தை அடுத்துள்ள வய்யபாடியை சேர்ந்த தொழிலாளி சந்தோஷ் (வயது 40) என்பதும், கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கோட்டயம் மீனடம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 38), அவருடைய மனைவி குஞ்சுமோள் (வயது 35) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக வினோத்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான் முச்சக்கரவண்டி சாரதியாக வேலை செய்து வருகிறேன்.

என்னுடைய மனைவிக்கும், சந்தோஸுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதுகுறித்து தெரியவந்ததை தொடர்ந்து, எனது மனைவியை கண்டித்தேன். இருந்தபோதிலும் எனது மனைவி கள்ளக்காதலை கைவிடவில்லை.

நான் இல்லாத சமயத்தில் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வரும் விடயத்தை அயலவர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

இதனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், வழக்கம் போல் முச்சக்கரவண்டியை எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வது போன்று போய், எனது வீட்டுக்கு அருகிலிருக்கும் காட்டுப் பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு சத்தமில்லாமல் வீட்டுக்கு பின்புறத்திலுள்ள ஒரு மரத்தடியில் மறைந்திருந்தேன்.

சற்று நேரத்தில் எனது மனைவியின் கள்ளக்காதலன் சந்தோஷ் வருவதையும் வீட்டுக்குள் நுழைந்ததும் இருவரும் கதவை பூட்டியதையும் பார்த்த நான் ஜன்னல் வழியாக பார்த்தபோது இருவரும் உறவில் ஈடுபடுவதை கண்ணால் கண்டேன். 

சுமார் 5 மணிநேரத்தில் கள்ளக்காதலன் சந்தோஷ் வெளியில் சென்று வருவதாக போய்விட்டார். வேலை முடித்து செல்வதைப்போல் வீட்டுக்கு சென்ற நான், கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்து உல்லாசம் அனுபவித்தமை குறித்து மனைவியிடம் கேட்டேன். இதை மனைவி மறுத்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் உறவில் ஈடுபடும் காட்சிகளை தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பதைக் காட்டினேன். இதில் எனது மனைவி பயந்து போய் மன்னிக்குமாறு வேண்டினாள். 

இதனையடுத்து, சந்தோஷை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்கு எனது மனைவி குஞ்சுமோளை ஒத்துழைக்குமாறு கேட்டேன். சம்மதிக்காவிட்டால் கள்ளக்காதலனுடன் உறவில் ஈடுபடும் காட்சிகளை அவரது பெற்றோரிடம் காட்டுவதாகவும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினேன். 

இதனால் அச்சமடைந்த குஞ்சுமோள், சந்தோஷை கொலை செய்வதற்கு உதவுவதாக கூறினாள். 

அதன்படி சம்பவத்தன்று சந்தோஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உல்லாசம் அனுபவிப்பதாக ஆசை வார்த்தை கூறி மீண்டும் வீட்டுக்கு வருமாறு குஞ்சுமோள் அழைத்தாள். இதை நம்பிய சந்தோஷும் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், குஞ்சுமோளிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். குஞ்சுமோளும் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றாள். அப்போது இரும்புக்கம்பியால் சந்தோஷின் பின்மண்டையில் அடித்தேன். இதில் மயங்கி வீழ்ந்த சந்தோஷ் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பின்னர் நானும் எனது மனைவியும் சேர்ந்து சந்தோஷின் தலை மற்றும் உடற்பாகங்களை துண்டித்து பின்னர் அரிவாளால் உடலை வெட்டினேன். இருவரும் சேர்ந்து உடலை சாக்குமூட்டையில் கட்டி முச்சக்கரவண்டியில் ஏற்றினோம். முச்சக்கரவண்டி போகும் வழியில் இந்திராநகர் அருகேயுள்ள ஆற்றில் தலையை வீசினேன். 

தொடர்ந்து புதுப்பள்ளி பகுதியில் சென்றபோது திடீரென முச்சக்கரவண்டி பழுதாகியது. இதனால் பயந்து போய் சடலத்தை அங்கேயே வீசி விட்டு முச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டுக்கு வந்து முச்சக்கரவண்டி மற்றும் வீட்டிலிருந்த இரத்தக்கறைகளை சுத்தம் செய்தோம். எனினும் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு எங்களை பிடித்து விட்டனர் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே ஆற்றில் வீசப்பட்ட சந்தோஷின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர். 

பின்னர் அதனை டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தோஷை கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கணவன்–மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget