சொந்தச்செலவில் சூனியம் வைக்கிறோம்.. அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை பதிவு.


சிலர் தங்கள் துணையுடன் அந்தரங்கமாய் இருக்கும் நிலைகளில் அவற்றை புகைப்படங்களாக அல்லது வீடியோக்களாக தங்களது smart phone களில் பதிந்து வைத்துக்கொள்கின்றனர்.

இவர்கள் காதலர்களாக, கள்ளத்தொடர்புகளை கொண்டோராக, கணவன் மனைவியராக எந்த வடிவத்தில் இருந்தாலும் ஒரு வித self pleasure இற்காக இவ்வாறான காரியங்களை செய்து தங்களது Smart phone களில் சேமித்து வைக்கிறார்கள்.

அதுவே அவர்களுக்கான ஆப்பாக ஒரு நாள் வந்து சேருகிறது.

இதனை தங்களது கணிணியில் சேமித்து மீளப்பார்த்து சிற்றின்பம் அடைகிற ஒரு கூட்டமும் உண்டு.

இவர்களது கணிணி ஏதோ ஒரு வகையில் இன்னொருவரின் கட்டுப்பாட்டில் வந்தால் கதை கந்தலாகிவிடும்!

ஒருவரது கணிணியை desktop control மூலம் வேறொருவர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியும். அது போல உங்களது அலுவலக network Admin அல்லது கணிணி துறை கில்லாடி ஒருவர் உங்களது கணிணிக்குள் உங்களுக்கு தெரியாமல் remote access மூலம் நுழையவும் வாய்ப்புகள் உண்டு!

இதற்கென்று பிரத்தியேக hacking softwares மற்றும் malware ஆகியன பயன்படும்!

ஆகையால் நமது கணிணிதானே என்று இவ்வாறான அந்தரங்கங்களை சேமித்து வைத்து தம்மை அறியாமல் திருட்டுக்கொடுத்து சுய மரியாதை இழந்த பலர் உண்டு.

அது போல கணிணிகளை திருத்துவதற்கு கொடுக்கும் போது இவ்வாறான அந்தரங்க விடயங்களை கணிணி திருத்துணர்கள் களவாடி பின் அவை அம்பலத்திற்கு வருவதும் உண்டு! ( எல்லா கணிணி திருத்துணர்களும் அப்படியல்ல )

மேலும் நமது smart phone களில் சேமித்து வைக்கப்படும் இந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவேளை உங்களது phone பழுதடைந்தால் திருத்த கொடுக்கும் இடங்களில் மாட்டிக்கொள்கின்றன!

அவை உங்களது phone இல் இருந்து உங்களால் பாதுகாப்பு கருதி அழிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை recover பண்ணக்கூடிய apps மற்றும் softwares தாராளமாக இருக்கின்றன.

அவற்றை பயன்படுத்தி phone திருத்துணர் உங்கள் ரகசியங்களை இலகுவாக திருடிவிட முடியும்!

அனேகமான phone repair கடைகளில் முதல் வேலையாக இந்த recovery வேலைதான் இடம்பெறுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன! (எல்லா இடங்களிலும் அல்ல!)

கூடவே நமது smart phone இல் அழிக்கப்பட்ட விடயங்களை மீளப்பெற முடியாத படி தடுக்கும் tool களும் உள்ளன.

அவற்றை பாவித்து இவ்வாறான ரகசியங்களை அழித்துவிட்டால் யாரும் அவற்றை மீளப்பெற முடியாது!

இந்த அறிவு விளக்கம் phone பழுதடைந்த, ரகசிய ஆவணங்கள் நிரம்பிய எல்லோருக்கும் இருக்கிறதா?
இல்லவே இல்லை.

ஆகையால் எல்லாவற்றையும் சாதாரணமாக அழித்துவிட்டு phone repair பண்ண கொடுக்கிறார்கள்!ஆனால் உங்களது அனைத்து data களும் கச்சிதமாக மீளப்பெறப்பட்டு phone திருத்துணர்களால் ரசிக்கப்படுகிறது!

இன்னும் ஒரு படி மேலே போய் சமூக வலைத்தளங்களில் அவை பகிரப்படுகின்றன!

ஆகவே இந்த அபாயங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி?

ஒன்று இவ்வாறான நெருக்கமான நிலைகளை புகைப்படமோ வீடியோவோ எடுப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது அவ்வாறு எடுக்கப்பட்டதை பாதுகாக்கும் யுக்தி தெரிந்திருக்கவேண்டும்.

மூன்றாவது phone கடைக்கு உங்களது smart phone போகும் போது அதனை recover பண்ண முடியாத tool இனைக்கொண்டு பாதுகாக்க தெரிந்திருக்க வேண்டும்.

கடைசியாக .....

நீங்கள் ரகசிய ஆவணங்களை உங்களது smart phone இல் வைத்திருப்பவராக இருந்தால்.....

மேற்சொன்ன விடயங்களை உங்களால் கடைப்பிடிக்க முடியாது போனால் .....

உங்களது smart phone பழுதடைந்தால்....

தயவு செய்து அதனை திருத்துவதற்கு கொடுத்து விடாதீர்கள்!

ஒரு குழியை தோண்டி புதைத்து விடுங்கள்.

- முஜீப் இப்ராஹிம் -

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget