சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது சிறைத்துறை! சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்!


உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை கவனிப்பதற்காக, சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

சசிகலா தங்கப்போகும் வீடு இதுதான்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, ஐந்து நாள் பரோலில் சென்னை வருகிறார். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் அவர் தங்கவுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடராசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4-ம் தேதி உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நடராசனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா விண்ணப்பித்திருந்தார்.

தீவிர பரிசீலனைக்குப் பின்னர், சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை இன்று 5 நாள் மட்டுமே பரோல் வழங்கியுள்ளது.

இன்று மாலை பெங்களூரிலிருந்து சென்னை வரும் சசிகலாவை வரவேற்க, தினகரன் தரப்பு தடபுடல் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்குச் செல்கிறார்.

எண்: 181/69. தியாகராய நகர் வீட்டுக்கு வரும் சசிகலா, பின்னர் நடராசன் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் செல்கிறார்.

ஏழு மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து வெளியே வருவதால், வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

- Vikatan

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.