சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இன்றும் ஜனாதிபதியாக மகிந்த


நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் இணையத்தளத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் பதிவேற்றம் செய்யப்படும் இணையத்தளத்தில் இதுவரை எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி 3 ஆம் திகதியே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தில் முன்பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டம் தொடர்பான தகவல்கள் மாத்திரமே காணப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்தோ, தற்போதைய சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பற்றிய தகவல்களே அதில் காணப்படவில்லை.

இந்த இணையத்தளத்திற்குள் பிரவேசிப்போருக்கு இலங்கையில் மகிந்த ராஜபக்சவே இன்னும் ஜனாதிபதியாக இருக்கின்றார் என்ற உணர்வையே ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget