நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் குதிக்கும் பௌத்த தேரர்கள்


அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக முத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு நேற்று(08) ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்போது அமைச்சர் சரத் பொன்சேகா போன்றோர் தேரர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் முன்னெடுக்கும் முறையற்ற ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது போதும். எனவே அரசாங்கத்திற்கு எதிராக களத்தில் இறங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்பெற்றதைப் போன்ற யுக மாற்றத்திற்கு நாம் தயாராகி விட்டோம். அப்பயணத்தில் சகல பெளத்த தேரர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.

அப்பயணத்தில் குறுக்கிடும் சகல சவால்களையும் முகம்கொடுப்பதற்கு தாம் தயாராகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசு தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியையும் மறந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் எப்போதும் இல்லாதவாறு பெளத்த மதத்திற்கு எதிரான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சதி முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் 48 தேரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவ்வாறான செயற்பாடு இதற்கு முன்னர் இடம்பெறவில்லை என்றும் முத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget