கத்தாருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட மார்க்க அறிஞர்களை கைது செய்தது சவூதி அரேபியா!


கத்தருக்கு எதிரான தடை தொடர்பில் சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்த பிரபல மார்க்க அறிஞர் சவூதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களைக் கடந்து தொடரும் அரபு நாடுகளுக்கிடையிலான பிரச்சனையில் இரு நாட்கள் முன்னர் முதன் முறையாக கத்தர் அமீரும் சவூதி இளவரசரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர். இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து சவூதியிலுள்ள பிரபல மார்க்க அறிஞர் ஷேக் சல்மான் அல் அவ்தா தம் சமூகவலைதளப் பக்கத்தில், '"இரு நாட்டு மக்களின் நன்மைக்காக தலைவர்களின் மனதினில் இறைவன் இணக்கத்தை ஏற்படுத்துவானாக'" என கருத்து தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவரை 14 மில்லியன் நபர்கள் ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்கின்றனர். 1994 ஆம் ஆண்டு, அரசியல் மாற்றம் குறித்து பேசியதற்காக இவர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
(Abdur Rahman)

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget