தனியே சென்ற பெண்ணை பின்தொடர்ந்த மர்ம நபர் ; காத்திருந்த விபரீதம், நடந்தது என்ன..?


மலேசியாவில் தஞ்சோங் பூங்கா அருகே சிறிது நேரம் கடலோரத்தில் பொழுதைக் கழித்து விட்டு, தன்னுடைய தங்கும் விடுதிக்கு குறுக்கு வழியாக சென்று கொண்டிருந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சம்பவ தினத்தன்று இரவு 11 மணியளவில் தங்கும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த 26 வயதுடைய நியூஸிலாந்தை சேர்ந்த சுற்றுப் பயணியை, பின் தொடர்ந்து பதுங்கிக் கொண்டுவந்த ஆசாமி ஒருவன், இடை நடுவில் குறித்த பெண்ணை பலாத்காரமாக வழிமறித்து இழுத்துச் சென்று அருகிலிருந்த அடுக்குமாடி வீட்டின் பின்புறம் பலாத்காரம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக, பாயான் லெப்பாசிலுள்ள மீனவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் உபயோகித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மீனவரை 6 நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளதோடு, குறித்த பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் 376 ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, இது பற்றிக் குறிப்பிட்ட அடுக்குமாடி வீடு ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தாம் பாதுகாவலர் அறையில் இருந்த போது 'எங்கள் குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர், வாகன நிறுத்தமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் உதவி கோரி கூச்சலிட்டதை கேட்டதாகவும்,பின்னர் அவரும் சத்தமிட்டவாறே அப் பெண்ணிற்கு உதவச் சென்ற போது குறித்த பெண்ணை விட்டுவிட்டு ஒருவன் தப்பித்து ஓடினான்' என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget