மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!


ருவன்வெல்ல- மொரலியவத்தை பகுதியிலுள்ள, வீடொன்றில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணை, அவரது கணவரே அடித்துக் கொன்றதாகவும், பின்னர் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 35 மற்றும் 34 வயதுடைய கணவன் மனைவி ஆகியோரே இறந்துள்ளனர்.இக்கொலைக்குக் காரணம் நீண்ட, காலமாக அவர்களுக்குள் நிலவி வந்த கருத்து முரண்பாடே என்று பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget