கத்தார் அதிபர் தமீம் அல்தானி அவர்கள் இராணுவ முகாமுக்கு திடீர் விஜயம்! (படங்கள் இணைப்பு)


கட்டார், அல் உபைதில் அமைந்துள்ள அமெரிக்காவின் மத்திய கிழக்கின் மிகப் பெரிய இராணுவத் தளத்துக்கு கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி விஜயம் செய்துள்ளார்.

10,000 அமெரிக்காக துருப்புகள் நிலைகொண்டுள்ள குறித்த இராணுவ தளமே மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவ தளமாகும். இரு நாட்டு கூட்டுறவு மற்றம் கூட்டு நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக கட்டார் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சவுதி கூட்டணி நாடுகளுடன் ராஜதந்திர முறுகலில் ஈடுபட்டுள்ள கட்டார் 
அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ள அதேவேளை ஈரானுடனும் ராஜதந்திர உறவுகளை புதுப்பித்துள்ளது. 

இதேவேளை, கட்டாரில் துருக்கி இராணுவ தளம் ஒன்றும் அமைந்துள்ளமையும் அதீத அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருந்த கட்டாரில் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget