வித்தியா படுகொலை விவகாரம் : குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபணம்


கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் வழக்கில், சதித்­திட்டம் தீட்­டி­யமை, கடத்திச் சென்­றமை, பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை, கொலை செய்­தமை ஆகிய நான்கு பிர­தான குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­டங்­கிய 41 குற்­றச்­சாட்­டுக்­க­ளி லும், ஒன்­பது எதி­ரி­களில் முதலாம் மற்றும் ஏழாம் எதி­ரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு எதி­ரி­க­ளுக்கு எதி­ரா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள்ளன என்று சட்­டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தெரி­வித்தார்.

அத்­துடன் இவ் வழக்கின் முதலாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் மற்றும் ஏழாம் எதி­ரி­யான பழ­னி­ரூ­ப­சிங்கம் குக­நாதன் ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக எந்­த­வி­த­மான சாட்­சி­யங்­களும் இல்­லை­யெ­னவும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் எடுத்­துக்­கூ­றினார்.

மாணவி வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ர யல் அட்பார் நீதி­மன்றில் திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரேம்­சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகி­யோரை உள்­ள­டக்கி வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மையில் இடம்­பெற்று வரு­கின்­றது.

இவ் வழக்கு விசா­ர­ணையில் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதி­ரிகள் தரப்பு சாட்சிப் பதி­வுகள் நிறை­வ­டைந்த நிலையில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை 16 ஆவது நாளாக குறித்த வழக்கு இரு தரப்பு தொகுப்­பு­ரை­க­ளுக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது வழக்கு தொடுநர் தரப்பு சார்­பாக இவ் வழக்­கினை நெறிப்­ப­டுத்தும் சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் இவ் வழக்கின் தொகுப்­பு­ரையை மேற்­கொண்­டி­ருந்தார்.

அவர் தனது தொகுப்­பு­ரையில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இந்த வழக்­கா­னது புங்­கு­டு­தீவு பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மிகக் கொடூ­ர­மான ஓர் சம்­பவம் தொடர்­பா­ன­தாகும். இவ் வழக்கில் சந்­தே­க­ந­பர்­க­ளாக கைது செய்­யப்­பட்ட ஒன்­பது பேருக்கும் எதி­ராக சட்­டமா அதி­பரால் 41 குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய குற்றப் பகிர்வு பத்­தி­ர­மா­னது தயார் செய்­யப்­பட்டு பிர­தம நீதி­ய­ர­சரால் நிய­மிக்­கப்­பட்ட அனு­பவம் வாய்ந்த மூன்று நீதி­ப­திகள் முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இவ் வழக்கின் ஆரம்­பத்தில் குறித்த சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் அவர்­க­ளுக்கு வாசித்து காண்­பிக்­கப்­பட்டு அதற்கு அவர்கள் நிர­ப­ரா­திகள் என மன்­று­ரைத்­ததை தொடர்ந்து இவ் வழக்கு சாட்சி பதிவு நட­வ­டிக்­கை­யா­னது ஆரம்­பித்­தி­ருந்­தது.

இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட இச் சாட்சிப் பதிவில் வித்­தி­யாவின் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தனது மகள் சம்­பவ தின­மான 2015.05.13 ஆம் திகதி காலை பாட­சா­லையில் சுத்தம் செய்ய வேண்­டி­யி­ருந்­ததால் அன்று காலை 7 மணிக்கும் 7.15 மணிக்­கு­மி­டையில் பாட­சாலை புறப்­பட்டு சென்­ற­தா­கவும் அன்று வித்­தியா தனி­யா­கவே பாட­சா­லைக்கு சென்­றி­ருந்தார் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் வித்­தியா 12 ஆம் திகதி பாட­சாலை செல்­ல­வில்லை எனவும் தனியார் வகுப்பு ஒன்று பார்ப்­பது தொடர்­பாக சென்­று­விட்டு வந்தார் எனவும் அவ்­வாறு தனியார் வகுப்பு பார்த்­து­விட்டு வரும் போதே தன்னை யாரோ பார்ப்­ப­தாக அவர் கூறி­ய­தா­கவும் வித்­தி­யாவின் தாயார் தனது சாட்­சி­யத்தில் கூறி­யி­ருந்தார். 

இவற்­றை­விட மேலும் வித்­தி­யாவின் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது வித்­தியா சம்­பவ தினத்­தன்று அணிந்­தி­ருந்த பாட­சாலை சீருடை, புத்­த­கப்பை, துவிச்­சக்­க­ர­வண்டி என அனைத்­தையும் அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார்.

இதன் பின்னர் குறித்த மாணவி சட­ல­மாக மீட்­கப்­பட்ட போது அங்கு அழுத வித்­தி­யாவின் தாயார் தன்­னிடம், 'வித்­தியா நேற்று சொன்னாள் தன்னை யாரோ வடி­வாக பார்த்­துக்­கொண்டு இருக்­கின்­றார்கள், பார்க்க வெளி­நாட்­டு­கா­ரர்கள் போல இருக்கு' என்று கூறியே அழுதார் என ஞானேஸ்­வரன் இலங்­கேஸ்­வரன் இந் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது கூறி­யி­ருந்தார். 

இதே­போன்று வித்­தி­யாவின் கண்­ணா­டி 6 ஆவது எதி­ரியின் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் அவ­ரது வீட்டில் இருந்து மீட்­கப்­பட்­ட­தா­கவும் அதனை வித்­தி­யா­வி­னு­ட­யது தான் என வித்­தி­யாவின் தாயார் உறு­திப்­ப­டுத்­தி­யதா­கவும் விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அத்­துடன் அது வித்­தி­யா­வுக்கு தான் சிபா­ரிசு செய்த கண்­ணாடி தான் என்­பதை கண் வைத்­திய நிபுணர் மல­ர­வனும் அக் கண்­ணா­டியை வித்­தி­யா­வுக்கு விற்­பனை செய்த கண்­ணாடி கடை உரி­மை­யா­ளரும் அதன் பவரை பரி­சோ­தித்­த­வர்­களும் இந் நீதி­மன்றில் தமது சாட்­சி­யங்­களை வழங்­கி­யி­ருந்­தனர்.

மேலும் இவ் வழக்கில் பதி­னொ­ரா­வது சந்­தே­க­ந­ப­ராக கைதுசெய்­யப்­பட்டு பின்னர் சட்­டமா அதி­ப­ரது சிபா­ரிசின் அடிப்­ப­டை யில் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு அரச தரப்பு சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட உத­ய­ சூ­ரியன் சுரேஸ்­கரன் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது, மாப்­பிள்ளை என்­பவர் வீட்டில் 5 ஆம், 6ஆம், 2ஆம், 3ஆம் எதி­ரிகள் கள்ளு குடிக்கும் போது 6ஆம் எதிரி தாம் வித்­தி­யாவை காத­லிப்­ப­தா­கவும் அவளை தூக்கி தர வேண்டும் என 2ஆம் எதி­ரி­யிடம் கேட்­ட­தா­கவும் அதற்கு 2ஆம் எதிரி தனக்கு அதற்­காக 23 ஆயிரம் ரூபா பணம் கேட்­ட­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதன்­படி தானும் 5 ஆம், 6 ஆம் எதி­ரிகள் வித்­தி­யாவின் நட­மாட்டம் தொடர்­பாக அவ­தா­னித்­ததா­கவும் 11 ஆம் திகதி வித்­தியா வேறொரு பிள்­ளை­யுடன் பாட­சா­லைக்கு சென்­ற­தா­கவும் 12 ஆம் திகதி வித்­தியா பாட­சா­லைக்கு செல்­ல­வில்லை என்­பதும் தம்மால் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

பின்னர் 13ஆம் திகதி வித்­தியா தனி­யாக வரும் போது வித்­தி­யாவை 6ஆம் எதி­ரியே வழி­ம­றித்­த­தா­கவும் தன்னை காத­லிக்­கி­றாயா? இல்­லையா? என கேட்டு அவ­ரது கன்­னத்தில் அறைந்­த­தா­கவும் இதன்­போது அவ­ரது கண்­ணாடி கீழே வீழ்ந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார். அதன் பின்னர் வித்­தி­யாவை பல­வந்­த­மாக பற்­றைக்­காட்­டுக்குள் இழுத்து சென்று பாழ­டைந்த வீட்­டிற்குள் படுக்க வைத்து மாறி மாறி பாலியல் வல்­லு­றவு புரிந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார். 

இவ­ரது சாட்­சி­யத்தை போன்றே இவ் வழக்கின் மற்­று­மொரு சாட்­சி­யான கள்ளு விற்­பனை செய்யும் மாப்­பிள்ளை என்­ப­வரும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அவற்­றை­விட இவ் வழக்கில் முன்­வைக்­கப்­பட்ட மற்­று­மொரு சாட்­சி­ய­மான மணி­வண்ணன் தனுராம், தானும் தனது நண்­ப­னான இலங்­கேஸ்­வரன் தனுஜன் என்­ப­வனும் பாட­சாலை செல்லும் போது சம்­பவம் நடந்த அன்று வித்­தியா கட்­டப்­பட்­டி­ருந்த இட­மான பகு­தியில் தனது நண்­பனின் செருப்பு கழன்று வீழ்ந்த போது தான் அதனை இறங்கி எடுத்­த­தா­கவும் அப்­போது அங்கே ரவி மாமா மஞ்சள் நிற ரீசேட்­டுடன் நின்­ற­ தாக சாட்­சி­ய­ம­ளித்தார். அத்­துடன் அங்கு ம்ம்ம்ம் என்ற சத்தம் ஒன்று வந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மற்­று­மொரு சாட்­சி­ய­மான பால­சிங்கம் பால­சந்­திரன் என்­ப­வ­ரது சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­டது. இது ஒரு முக்­கி­ய­மான சாட்­சி­யமாகும். அதா­வது இச் சாட்­சி­யா­னது யாரு­டைய தூண்­டு­தலும் இன்றி சுயா­தீ­ன­மாக வழங்­கப்­பட்ட சாட்­சி­யாகும். இவ் சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது வித்­தி­யாவின் சம்­பவம் நடந்த இடத்தில் அச் சம்­பவ தினத்­தன்று 2ஆம், 3ஆம் எதி­ரி­களை தாம் கண்­ட­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதே­போன்று இலங்­கேஸ்­வரன் என்ற சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது சின்­னா­லடி பகு­தியில் 2015.05.12 ஆம் திகதி வித்­தியா பஸ் வண்­டியில் இருந்து இறங்கி வீடு நோக்கி துவிச்­சக்­க­ர­வண்­டியை எடுத்­துக்­கொண்டு செல்­லும்­போது வெள்ளை நிற வானில் நின்று 4ஆம், 5ஆம், 8ஆம், 9ஆம் எதி­ரிகள் அவளை பார்த்­துக்­கொண்டு நின்­ற­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

சாந்­த­ரூ­பினி என்ற சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது 5ஆவது எதிரி சம்­பவ தினத்­தன்று சாரத்தை மடித்து கட்­டிக்­கொண்டு ஐயனார் கோவில் பக்கம் சென்­ற­தாக சாட்­சி­ய­ம­ளித்தார். ஆனால் 5ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் மீன்­பி­டிக்க கட­லுக்கு சென்­ற­தாக கூறினார்.

வேலணை பிர­தேச­ ச­பையில் குறித்த 6ஆவது எதிரி சம்­பவ தினத்­தன்று காலை 9.15 மணிக்கு சென்று 8.15 மணிக்கு சென்­ற­தாக வர­வுப்­புத்­த­கத்தில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­மையும் அதற்­கான சான்­று­களும் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றை­விட இவ் வழக்கில் மற்­று­மொரு முக்­கிய சாட்­சி­யாக பிரேத பரி­சோ­தனை செய்த சட்ட வைத்­திய அதி­காரி உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ரதன் சாட்­சியம் காணப்­ப­டு­கின்­றது. இவ­ரது சாட்­சி­யத்தில் வித்­தி­யாவின் சட­லத்தில் தலைப்பகு­தியில் காணப்­படும் காயங்கள் அது ஏற்­பட்­ட­தற்­கான கார­ணங்கள் தொடர்­பா­னவை உத­ய­சூ­ரியன் சுரேஸ்­கரன் மற்றும் மாப்­பிள்ளை என்­பவர் கூறிய சாட்­சி­யங்­க­ளுடன் ஒத்­துப்­போ­வ­தா­க­வுள்­ளது. அதா­வது வித்­தி­யாவை பாழ­டைந்த வீட்டில் கீழே படுக்க வைத்து அவர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தில் அவ­ரது தலை பல­முறை நிலத்­தோடு உராய்­வு­பட்­டதால் மரணம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என சட்­ட­வைத்­திய அதி­கா­ரியின் வைத்­திய அறிக்­கை­யு­ட­னான சாட்­சியம் குறிப்­பி­டு­கின்­றது. 

இவ்­வாறு வழக்கு தொடுநர் தரப்பால் முன்­வைக்­கப்­பட்ட எந்­த­வொரு சாட்­சி­யத்­திலும் முரண்­பா­டு­களோ அல்­லது விடு­கை­களோ காணப்­ப­ட­வில்லை. அத்­துடன் அவ்­வாறு முரண்­பா­டுகள் விடு­கைகள் காணப்­ப­டு­வது தொடர்­பாக எதிரி தரப்பு சட்­டத்­த­ர­ணி­களால் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வு­மில்லை.

மேலும் இவ் வழக்கில் எதி­ரி­களில் முதலாம் எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் தனது சகோ­த­ர­னான 3ஆம் எதி­ரி­யுடன் சம்­பவ தினத்­தன்று ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றுக்கு செல்­வ­தற்­காக துவிச்­சக்­க­ர­வண்­டியில் பேருந்து நிலை­யத்­துக்கு சென்­ற­தாக சாட்­சி­ய­ம­ளிக்­க­வில்லை. ஆனால் 3ஆம் எதிரி மேற்­கூ­றி­ய­வாறு சாட்­சி­ய­மொன்றை முதல் தட­வை­யாக மன்றில் தெரி­வித்தார். எனினும் இவ் வழக்கில் முதலாம் எதி­ரிக்கு எதி­ராக எந்­த­வொரு சாட்­சி­யமும் காணப்­ப­ட­வில்லை.

6ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது இவ் வழக்கில் முதல் தட­வை­யாக கூறினார் தம்­மிடம் பொலிஸார் குடி­போ­தையில் வாக்­கு­மூலம் பெற்­ற­தாக. ஆனால் அது தொடர்­பாக குறுக்கு விசா­ர­ணையின் போது எந்­த­வி­த­மான கேள்­வி­களும் பொலிஸார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­களால் கேட்­கப்­ப­ட­ வில்லை.

8 ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தன்னை பொலிஸார் சித்­தி­ர­வதை செய்து பின்னர் முகத்தை கழுவி பவுடர் போட்டு வீடியோ எடுத்­த­தாக கூறினார். ஆனால் இது தொடர்­பாக பொலிஸார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது அது தொடர்­பாக குறுக்கு விசா­ர­ணையில் எந்­த­வி­த­மான கேள்­வி­க­ளையும் அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் கேட்­க­வில்லை. அத்­துடன் இவர் தனது சாட்­சி­யத்தில் தனக்கு கம்­பி­யூட்டர் தொடர்­பாக அனைத்தும் தெரியும் எனவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதனை தொடர்ந்து இவ் வழக்கின் 9 ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் ஒரு­முறை இலங்கை வந்தால் தனக்கு 20 இலட்சம் செல­வாகும் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அப்­ப­டி­யாயின் இவர் வவு­னியா சிறையில் வைத்து இப்லார் ஊடாக நிஷாந்த சில்­வா­வுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுக்க முற்­பட்­டதை ஏற்­றுக்கொள் ளக் கூடி­ய­தாக இருக் கும். அத்­துடன் இவர் சார்பில் சாட்­சிக்­காக அழைக்­கப்­பட்ட இவ­ரது மனைவி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது 2015.05.08ஆம் திக­தியில் இருந்து 2015.05.13ஆம் திகதி வரை வெள்­ள­வத்தை ஏஞ்சல் லொட்ஜில் தனது கண­வ­ரான 9ஆம் எதி­ரி­யுடன் இருந்­த­தா­கவும் வெளியே எங்கும் சென்­ற­தில்லை எனவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

ஆனால் குறித்த 9ஆம் எதி­ரி­யான சுவிஸ்­குமார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது குறித்த காலப்­ப­கு­தியில் தான் வெளியில் சென்று வந்­த­தாக சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். அவ்­வாறு பார்க்கும் போது குறித்த இரண்டு சாட்­சி­யங்­க­ளு­க்கு­மி­டை­யே முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றதை அவ­தா­னிக்­கலாம்.

இவ்­வாறு அரச தரப்பு மற்றும் எதிரி தரப்பு சாட்சிப் பதி­வு­க­ளுடன் குறித்த வழக்­கா­னது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இவ் வழக்கில் குறித்த ஒன்­பது எதி­ரி­களில் முதலாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் மற்றும் 7ஆம் எதி­ரி­யான பழ­னி­ரூ­ப­சிங்கம் குக­நாதன் ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக எந்­த­வி­த­மான சாட்­சி­யங்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் இவ் ஒன்பது பேரில் மேற்கூறிய இருவரும் தவிர்ந்த ஏனைய எதிரிகளான 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரி சிவதேவன் துஷாந்தன், 8ஆம் எதிரி ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரி மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றார். 

தொடர்ந்து குறித்த வழக்கினை விரை வாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங் கிய ட்ரயல் அட்பார் நீதிபகளுக்கும், குற்றச் சம்பவம் தொடர்பான விரைவான விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனா ய்வு பிரிவினர், பொலிஸாருக்கும் வழ க்கு நடவடிக்கையின் போது உதவி வழங் கிய நீதிமன்ற பணியாளர்களுக்கும், சிறை க்காவலர்களுக்கும், எதிரிகள் தரப்பு சட்ட த்தரணிகளுக்கும் இவ் வழக்கு தொடர் பாக குற்றச் சம்பவம் இடம்பெற்றதில் இருந்து இன்றுவரை இவ் வழக்கு தொட ர்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களுக்கும் சட்டமா அதிபர் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்து இவ் வழக்கு தொடர்பான தனது இறுதி தொகுப்புரையை நிறைவு செய்திருந்தார்.

இதேவேளை, குறித்த வழக்கு தொடுநர் தரப்பு தொகுப்புரையானது நேற்றுக் காலை 9.40 மணியளவில் ஆரம்பித்து மாலை 4.25 மணிவரை நீண்ட நேரம் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget