”பிரசவவலியை தாங்க முடியாது ”ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்


சீனாவில் பிரசவலியை தாங்க முடியாது என கூறி ஆப்ரேஷன் தியேட்டர் ஜன்னல் வழியாக கர்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள சேன்ஸ்கி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தினால் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது மிகவும் கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கினர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை வேண்டாம் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்யுங்கள் எனக்கூறி கையெழுத்திட மறுத்துள்ளார்.

இந்தநிலையில் பிரசவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த பெண் பிரசவ வலியை பொறுத்துக்கொள்ள இயலாது என கூறி, ஆபரே‌ஷன் தியேட்டர் ஜன்னல் வழியே வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. 

இந்த செய்தி சீனா ஊடகங்களில் விவாதபொருளாக மாறியுள்ளது. பிரசவ வலியை ஒரு பெண் மட்டுமே அனுபவிக்கிறாள். எனவே தனக்கு எந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன் அந்த பெண்ணிடம் கையெழுத்தை வாங்கியிருக்க வேண்டும் என MarciaLeyuan என்பவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இவரது கருத்திற்கு சுமார் 10,000 லைக்ஸ் வந்துள்ளது. மேலும் சிலர் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர். என கூறியுள்ளனர்.

இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது:

என மனைவி மிகவும் தைரியமானவள், அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை என கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget