அமெரிக்க உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த நாள் – 9/11 (முழு விபரம்)


2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும் அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள், ஏராளமானோர் படுகாயமடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்-காயிதா அமைப்பு இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற ஸ்லோகனை உருவாக்கி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு புதிய இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்தது அமெரிக்கா.

தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் உருண்டோடினாலும் அதன் இரகசியங்கள் காக்கப்பட்டிருப்பது இந்த நூற்றாண்டின் பெரும் சவால்.

மேலும் அது பற்றிய தகவல்கள் அவ்வப்போது கசிந்தாலும், அவற்றை சந்தேகத்துடன் அணுகும் போக்கு உலக மனிதர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பது பேரதிசயம்!

ஆனாலும் தாக்குதல் பற்றிய சிறிய அளவிலான செய்தி, துணுக்காகப் போடப்பட்டாலும் உடம்பு சிலிர்க்கும்படியான பரபரப்பும் கூடவே தொற்றிக்கொள்கிறது.

அது பற்றிய ஒரு முழுமையான அலசல் தான் இந்த சிறப்பு செய்தி!

உலக வர்த்தக மையம் பற்றி சில தகவல்கள்..

உலக வர்த்தக மையம் என்பது 7 கட்டிடங்களை கொண்ட ஒரு தொகுப்பாகும். அதில் 110 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களும் (1&2), மாரியோட்ட் உலக வர்த்தக மையம் 3) மற்றும் உலக வர்த்தக மையம் (4,5,6 &7) ஆகிய 7 கட்டிடங்களை கொண்ட தொகுப்பாகும். இந்த உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரின் டவுன்டவுன் பொருளாதார மாவட்டதின் மையப்பகுதியில் அமைந்திருந்தது. இக்கட்டிட தொகுப்புகள் கி.பி 1975-85 வாக்கில் கட்டப்பட்டன. இக்கட்டிடங்களை கட்டி முடிக்க 400 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. மொத்தம் 1.24 மில்லியன் சதுர மீட்டர் அலுவலக பரப்பளவு கொண்டது.

செப்டம்பர் 11: நடந்தது என்ன?

4 பயனிகள் விமானங்கள் 19 பேர் கொண்ட குழுவால் கடத்தப்படுகின்றன. (அந்தக் குழு அல்-காயிதா அமைப்பை சார்ந்தவர்கள் என புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு கூறியது)

1. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11 பாஸ்டன் நகரின் லொகான் விமான நிலையத்தில் இருந்து 76 பயனிகளுடனும், 11 விமான பனியாளர்களுடனும் (5 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 7:59 மணி அளவியல் லாஸ் ஏஞ்சல் நகருக்கு புறப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி 8:46 மணி அளவில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள்.

2. யுனிடெட் ஏர்லைன்ஸ் விமானம் 175 பாஸ்டன் நகரின் லொகான் விமான் நிலையத்தில் இருந்து 51 பயனிகளுடனும், 9 விமான பனியாளர்களுடனும் (5 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 8:14 மணி அளவியல் லாஸ் ஏஞ்சல் நகருக்கு புறப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி 9:03 மணி அளவில் உலக வர்த்தக மைய்யத்தின் தெற்க்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள்.

3. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77 வாஷிங்டன் நகரின் டல்லெஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 53 பயனிகளுடனும், 6 விமான பனியாளர்களுடனும் (5 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 8:20 மணி அளவியல் லாஸ் ஏஞ்சல் நகருக்கு புறப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி 9:37 மணி அளவில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோதுகிறார்கள்.

4. யுனிடெட் ஏர்லைன்ஸ் விமானம் 93 நியூயார்க் நகரின் நியூஆர்க் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 33 பயனிகளுடனும், 7 விமான பனியாளர்களுடனும் (4 கடத்தல்காரர்களை தவிர்த்து) காலை 8:42 மணி அளவியல் சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு புறப்படுகிறது. விமான கடத்தல்காரர்கள் அவ்விமானத்தை கடத்தி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடதை இடிப்பதற்காக வாஷிங்டன் நோக்கி செலுத்துகிறார்கள். விமான பயனிகள் விமானத்தை கடத்தல்காரார்களிடம் இருந்து மிட்க போராடிய பொழுது, கடத்தல்காரார்கள் விமானத்தின் கட்டுப்பாடை இழந்து, பென்சில்வேனியா நகரின், சாங்க்ஸ்விலே என்ற பகுதியில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயனம் செய்த அனைவரும் பலியானார்கள்.

தெற்கு டவரில். நடைப்பெற்ற நிகழ்வுகள்

தெற்கு டவர் 110 மாடிகளை கொண்ட ஒரு மிக உயரமான அமைப்பாகும். இது 1973-ல் கட்டி முடிக்கபட்டது. அப்பொழுது அதன் உயரம் 1,368 அடிகள் (417 மீட்டர்கள்). அக்காலத்தில் உலகின் 2வது மிக உயரமான கட்டிடமாக இது இருந்தது.

விமான கடத்தல்காரர்கள் யுனிடெட் ஏர்லைன்ஸ்-175 விமானத்தை கடத்தி காலை 9:03 மணி அளவில் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள். அவ்விமானம் 77-85 ஆம் மாடிகளின் இடையே கட்டிடத்தின் தெற்கு பக்கத்தில் மோதுகிறது.. விமானம் மோதியதும் அதில் இருந்த எரிபொருள் அனைதும் வெளியேறி கட்டிடம் முழுவதும் தீபற்றி எரிந்தது. 56 நிமிடங்கள் எரிந்த அக்கட்டிடம் காலை 9:59 மணி அளவில் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.

வடக்கு டவரில். நடைப்பெற்ற நிகழ்வுகள்.

வடக்கு டவர் 110 மாடிகளை கொண்ட ஒரு மிக உயரமான அமைப்பாகும். இது 1972-ல் கட்டி முடிக்கபட்டது. அப்பொழுது அதன் உயரம் 1,368 அடிகள் (417 மீட்டர்கள்). அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக இது 2 ஆண்டுகள் இருந்தது. பின்னர், 1978 வாக்கில் 110 மீட்டர் உயரமுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்பட்டன.

விமான கடத்தல்காரர்கள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-11 விமானத்தை கடத்தி காலை 8:46 மணி அளவில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கட்டிடத்தில் மோதுகிறார்கள். அவ்விமானம் 93-99 ஆம் மாடிகளின் இடையே கட்டிடத்தின் வடக்கு பக்கத்தில் மோதுகிறது. விமானம் மோதிய இடத்திற்கு மேல உள்ள மாடிகளில் இருந்த 1344 பேர் கீழே வருவதற்கான வழிகள் அனைத்தும் விமானம் மோதியதால் அழிந்து விட்டன. 10:28 மணி அளவில் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.

உலக வர்த்தக மையம்-7

உலக வர்த்தக மைய இடிப்பு சம்பவங்களில் நாம் அறிய வேண்டியது WTC-7 என்னும் 47 மாடிகளைக் கொண்ட ஒரு அமைப்பை பற்றி தான். 610 அடி (190 மீட்டர்) உயரம் கொண்ட இந்த அமைப்பு உலக வர்த்தக மையத்தின் ஒரு பகுதி. 1981 இல் துவக்கப்பட்ட இக்கட்டிடவேலைகள் 1983-ல் முடிந்தன. மார்ச் 1983 ல் இக்கட்டிடம் துவக்கப்பட்டது.

செப்டம்பர் 11, தாக்குதலில் இக்கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. நினைவில் கொள்ளுங்கள், இக்கட்டிடத்தில் எந்த விமானமும் மோத வில்லை.

(இந்த கட்டிடமானது வடக்கு டவரில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்தது. 110 மாடிகள் கொண்ட அவ்வடக்கு டவர் இடிந்த போது, அதன் இடிபாடுகள் WTC-7 கட்டிடத்தின் தெற்குப் பக்க சுவர்களின் மீது விழுந்து பலத்த சேதத்தை உண்டாக்கியதாகவும் மேலும் 7 முதல் 17 வரை உள்ள மாடிகளின் தென்மேற்கு மூலையில் பலத்த சேதத்தை உருவாக்கியதாகவும், அப்போது உருவான தீ அக்கட்டிடத்தில் உள்ள மரப்பொருட்களை எரித்ததாகவும், தானியங்கி தீயனைப்பு கருவியில் ஏற்பட்ட கோளாரால் தீயை அனைக்க முடியாமல் போனதாகவும் படிப்படியாக தீயின் அளவு அதிகரித்து செப்டம்பர் 11, மாலை 5:20:33 அளவில் இக்கட்டிடம் சரியத் தொடங்கி 37 வினாடிகளில் அதாவது மலை 5:21:10 மணி அளவில் இக்கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது எனவும் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு கூறியது)

உலக வர்த்தக மைய இடிப்பு சம்பவங்களின் சர்ச்சைகள் ஏற்பட இக்கட்டிட இடிப்பு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

உலக வர்த்தக மையம்-7 ம் மறைக்க பட்ட உண்மைகளும்:

சர்சையான சில காரணங்களை கீழே காண்போம்.

1. இக்கட்டிடமானது விமானத்தால் தாக்கப்படவில்லை. மேலும் இரட்டை கோபுரங்களில் இருந்து விழுந்த இடிப்பாடுகள் தான் இக்கட்டிடதை சேதப்படுத்தின. மேலும் அவைகளே தீயை உருவாக்கின.

2. உலகில் எந்த ஒரு கட்டிடமும் இதுவரை தீ பிடித்து எரிந்து முழுவதுமாக் இடிந்ததில்லை.

3. கட்டிடம் இடிந்த சில நாட்களில் அமெரிக்க வானிலை மையம் அவ்விடதை ஆய்வு செய்த போது 1320 செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்ததாக சொன்னது. இக்கட்டிடத்திமன் மீது விமானங்கல் மோதவில்லை எனவே விமான எரிப்பொருள் அக்கட்டிடங்களின் மீது படவில்லை. மேலும், கட்டிங்களில் இருந்த மரப்பொருட்கள் இவ்வளவு அதிகப்பட்ச வெப்பனிலையை உருவாக்க வைப்பு இல்லை. எனவே, இக்கட்டிடம் இடிக்க வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகிப்பட்டது. ஏனெனில், இவ்வளவு உயர்ந்த அளவிலான வெப்பம் வெடிப்பொருட்களாலே உருவாக்கபடும்.

4. இச்சம்பவம் உலக பார்வையில் இருந்து மறைக்கப்பட்டது. இக்கட்டிட இடிபாடு குறித்து மிக சில காணொளிகளே இனையத்தில் உள்ளன.

5. ஜேம்ஸ் க்லாஞ் என்ற FEMA ஆராய்ச்சியாளர் இக்கட்டிதிலிருந்த உருகிய எஃகு வை கொண்டு ஆராய்ந்ததில், அது அதிகப்படியான துளைகலுடன் ஒரு சுவிஸ் சீசை போல இருந்ததாகவும், அத்துளைகள் எஃகு உருகியாதால் ஏற்பட்டதாகவும், மேலும் இக்கட்டிதில் இருந்த பொருட்கள் மூலம் உருவாகிய வெப்பம் எஃகுவை உருக்கும் அளவில் இருக்காது என்றும் வாதிட்டார். மேலும் அவர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகளின் மூலமாகவே WTC-7 தரைமட்டமாகப்பட்டதாக தெரிவிதார்.

6. மேலும், இக்கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்த உருகிய எஃகு, அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட 9/11 விசாரனை கமிட்டி தனது விசாரனையை தொடங்குவதற்கு முன்பே துண்டாக வெட்டப்பட்டு, தென் சீனா-வுக்கு கப்பல்களின் மூலமாக அனுப்பப்பட்டது.

சிஐஏவின் பயங்கரவாதம்

சர்வதேச அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் திருப்பத்தைக் கொண்டுவந்தது 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல்தான் என்று கூறலாம். உலகெங்கும் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக தன்னுடன் ஒன்று சேருமாறு அமெரிக்கா பல நாடுகளையும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டது.

உலகெங்கும் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தீவிரமாக ஈடுபட்டது.

சிஐஏ விற்கு யாரும் அதிகாரம் வழங்கத் தேவையில்லை அது தனக்குத் தேவையான அதிகாரங்களைத் தானே எடுத்துக் கொள்ளும். 9/11இற்குப் பின் சிஐஏ வில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன.

சிஐஏ வின் சித்திர வதை முகாம்கள்

தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு, தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல்-காயிதா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐ பாவித்தது.

இந்த சித்திரவதையை விக்கிபீடியா இப்படிக் கூறுகிறது:

The prisoner is bound to an inclined board, feet raised and head slightly below the feet. Cellophane is wrapped over the prisoner’s face and water is poured over him. Unavoidably, the gag reflex kicks in and a terrifying fear of drowning leads to almost instant pleas to bring the treatment to a halt. According to the sources, CIA officers who subjected themselves to the water boarding technique lasted an average of 14 seconds before caving in. They said al Qaeda’s toughest prisoner, Khalid Sheik Mohammed, won the admiration of interrogators when he was able to last over two minutes before begging to confess.

சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்ற பயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்பதுதான் இந்த water boarding சித்திரவதை.

ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல்-காயிதா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் “கைதுகளும் சிறை வைத்தலும்” எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல.

பலம் பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிலையம்.

சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9/11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர் பலர் உள்ளனர்.

மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ

வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு, முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயல்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ 9/11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது.

அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்க பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடமைப்பட்டவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் படைப்பிரிவு ஒரு ஒட்டுக் குழுபோல் செயல்படுகிறது.

சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர்.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்

சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொலை செய்யும் எந்திரங்கள்.

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அல் காயிதாவை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் பல அப்பாவி மக்களை கொலை செய்ததில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாகிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர்.

பிடித்துக் கொல்லுதலும் கொன்று பிடித்தலும்

சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயல்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயல்பாட்டுக்கு மாறியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். சிஐஏ தேவை ஏற்படும் போது தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும் பாவிக்கத் தயங்குவதில்லை என்றும் சில செய்திகள் கூறுகின்றன.

சிஐஏ 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்கிறதா அல்லது தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்வதற்காக இரட்டைக் கோபுரத்தாக்குதலை சிஐஏ நடத்தியதா என்ற கேள்வியும் உண்டு. Andreas von Bulow என்ற ஜெர்மனியர் தனது The CIA and September 11 என்ற நூலில் இந்தக் கேள்வியையே முன்வைக்கிறார்.

9/11 தாக்குதலுக்குப் பின்னர் பலரும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். “இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்” என்று கூறும் அவர்கள் அது பற்றிய ஆவணப்படங்கள் எடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தினர், அவர்களின் பதிவுகளில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு இதுவரை பதில்கள் கிடைத்ததாக தகவல் இல்லை!

விடையில்லாக் கேள்விகள்:

பென்டகனில் மோதியதாகச் சொல்லப்படும் விமானம் (போயிங் 757) நிஜமாகவே மோதியிருந்தால் அது ஏற்படுத்திய தாகச் சொல்லப்படும் துளையை விட பெரிதான ஒரு துளையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவே இந்தத் துளை வேறு வகையில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அந்த விமானத்துக்கு என்ன நடந்தது? அதில் இருந்தவர்கள் என்னவானார்கள்?

பென்டகன் அருகில் போயிங் விமானத்தின் எந்த பாகங்களுமே கிடைக்க வில்லையாமே?

விமானம் மோதினால் அதிலுள்ள எரிபொருள் பற்றி எரியும் போது அருகிலுள்ள எதுவுமே பிழைக்காது. ஆனால் அரசு வெளியிட்ட படங்களைக் கூர்ந்து கவனித்தால் அருகில் ஒரு மேஜை, நாற்காலி அதன் மேல் திறந்த படி இருக்கும் புத்தகம் என்று பலவும் எரியாமல் உள்ளன.

விமானத்தின் கறுப்புப் பெட்டி கூட எரிந்து காற்றோடு காற்றாகிப் போனதாகச் சொல்லும் நிர்வாகம் உடல்கள் கிடைத்தன என்றும் அவற்றின் அடையாளங்கள் காணப்பட்டு ஒவ்வொருவரும் யார் யார் என்று கண்டறியப்பட்டன என்றும் சொல்கிறார்களே அது எப்படி?

உலக வர்த்தக மையக் கட்டடம் விமானங்கள் மோதியதால் சிதறி விழுந்ததா அல்லது வெடி வைத்து தகர்க்கப்பட்டதா?

உலக வர்த்தக மையக் கட்டடம் விழுந்த பின்னர் அங்குள்ள தடயங்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டதற்கான காரங்கள் என்ன?

சம்பவம் நடக்கப் போகும் நாள் முன்கூட்டியே புஷ் அரசுக்குத் தெரியுமா? அன்று ஏதோ காரணங்களால் அமெரிக்கப் போர் விமானங்கள் பலவும் அலாஸ்கா, கனடா வான்வெளியில் போர்ப்பயிற்சிக்கென அகற்றப்பட்டதாகவும் இருக்கும் விமானங்களும் கடத்தப்பட்ட விமானங்களைத் தாக்காவண்ணம் குழப்பமளிக்கும் தகவல்கள் தரப்பட்டதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன

இவ்வாறு பல கேள்விகள் எழுந்த நிலையில் 2004 ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக வர்த்தக மையக் கட்டடம் தாக்கப்பட்டது பற்றிய “பாரன்ஹீட் 9/11” என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதுவரை வெளியான உலக ஆவணப்படங்களிலேயே அதிகம் சம்பாதித்திருப்பது இந்தப் படம் தான் என்று கூறப்படுகிறது.

அந்த ஆவணப்படத்தில் சுமார் 3000 பேரை பலி கொண்ட அந்தத் தாக்குதல் நடந்தபோது அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு நர்சரி பள்ளிக்கூடத்தில் அமர்ந்து குழந்தைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் நெருங்கி வந்து, இரண்டாவதாக ஒரு விமானம் மோதியிருக்கிறது, தேசம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார். அப்போதும் புஷ், குழந்தைகளின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்” என்று நீளுகிறது அப்படம்.

மேலும் இதுபோன்ற எண்ணற்ற விடையில்லாக் கேள்விகளுடன் வெளியான இந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் இந்த சம்பவம் அமெரிக்காவின் நன்கு திட்டமிடப்பட்ட சதி என்கிறார்கள்.

டாக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ்:

“19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்க சாத்தியமே இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது விமான பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு பயன்படுத்தப் பட்டுள்ளதை அறியலாம்” என்று கூறுகிறார்.

“இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியாது.

விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் கொண்டது. இரட்டை கோபுரத் தூண்களோ 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாதது” என்று இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது.

தாக்குதல் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எரிக்கும் சக்தி பெற்றது தான் என்று முன்னுக்குப் பின் முரணாக அறிக்கை வெளியிட்டது.

விமானம் வளைந்த விதத்தைப் பற்றி விமான ஓட்டுனர்கள் பலரும், “பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது ஆனால் ராணுவ விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமே” என்கிறார்கள்.

அடுத்து சொல்லகூடிய முக்கிய தடயம் போன்…

பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark begham. Can you hear me. Mom! Mom!.)

32000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தினுள் இருக்கும் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்பது பற்றி நெட்ஒர்க் பொறியாளர்கள் கூறுகிறார்கள்,

4000 அடியில் .04 % நெட்வர்க்கும் 8000 அடியில் .01% நெட்வர்க்கும் 32000 அடியில் .006% நெட்வர்க்கும் தான் கிடைக்கும். 0% என்றாலே நெட்வர்க் கிடைக்காது, .006% என்றால்?

கருப்புப்பெட்டி எங்கே…?

விமானம் விபத்துக்குள்ளானால் முக்கிய தடயமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி தான். ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டிகள் இருக்கும். 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தாலும் கறுப்புப் பெட்டியை அழிக்க முடியாதவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறிருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறியது புஷ் அரசு!

“உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேலும் புஷ் அரசாங்கத்தின் இரகசிய அதிகாரிகளும் தான் என்று அமெரிக்க மக்களுக்கு ஐயமின்றித் தெரியவரும்போது இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்” என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்றவரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் கூறுகிறார், “கடந்த வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன். அதன் விளைவாக 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் இதுபற்றிய ஆய்வில் இறங்கியபோது இராணுவப் படையில் உள்ள நண்பர்கள் ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும் பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து விரிவாக விளக்கியதும் அந்த சந்தேகம் மாறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே அவர்களுக்கு டென்மார்க் கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ, 9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை அப்போது ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில்,

இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது,

9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது.

அரபு முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர்.

இத்தாக்குதலுக்கு நீண்டகால திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.

மேலும் இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் தற்போதைய சவுதி மக்களால் இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம்.

மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் போது, அதன் அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன், ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது.

மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்.

பெண்டகனைத் தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை.

தாக்குதலில், விமானம் முழுவதுமாக ஆவியாகிவிட்டதா?

கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறுகிறார்கள், அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் மாயமாக மறைந்து விட்டனவா?

இத்தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்றும், புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக உலக மகா பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக், ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுப்பதுதான்.

இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்றும் மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு ‘உம்மா’ என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொல்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்றும் அவர் துப்பாக்கி சுடுவது போலவும் பயிற்சியளிப்பது போலவும் ஊமையாகக் காட்டிய ஊடகங்கள், அவர் அளித்த பேட்டியை இறுதி வரை காட்டாமலே இருட்டடிப்பு செய்து விட்டன

அல்-ஜஸிரா ஊடகம் மட்டுமே ஒளிபரப்பியது.

9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி!. சொந்த மக்களையே படுகொலை செய்திருக்கிறது அமெரிக்க அரசு! என கூறும் ரஷ்யா, அது பற்றிய முக்கிய ஆதாரங்களையும் வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன என்று அமெரிக்காவை கடுமையாக சாடியிருக்கிறது ரஷ்யா!

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget