மூன்று கற்பழிப்பு, 7 பெண்கள் படுகொலை: குற்றவாளிக்கு 360 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவில் 3 பெண்களை கற்பழித்து விட்டு 7 பெண்களை படுகொலை செய்த கொடூரமான கொலையாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 360 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் William Devin Howell(47) என்பவர் வசித்து வந்துள்ளார்.

பெண்கள் மீது அதீத மோகம் உள்ள வில்லியம் ஏற்கனவே பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஆவர்.

இந்நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு 7 பெண்களை கடத்தில் தனது வேனில் சிறை வைத்துள்ளார்.

இவர்களில் 3 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். பின்னர் எஞ்சிய பெண்கள் உள்பட 7 பேரின் சடலங்களை காட்டுப்பகுதியில் புதைத்துள்ளார்.

இவர்களின் 3 உடல்கள் கடந்த 2007-ம் ஆண்டு பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. எஞ்சியவர்களின் உடல் உறுப்புகள் 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வில்லியம் மீதான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது அவர் ஒரு சீரியல் கில்லர் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், பெண்களை கற்பழித்து கொலை செய்துவிட்டு சடலங்களை வீட்டில் வைத்து அவற்றுடன் இரவு நேரங்களில் உறங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வில்லியம் மீதான அனைத்து குற்றங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் 17-ம் திகதி அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக 360 ஆண்டுகள் சிறை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget