கடுமையாக தாக்கி வரும் புயல்! 50 லட்சம் மக்களை வெளியேறுமாறு உத்தரவு


அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ததையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் கீழ் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் இந்தப் புயல் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.

இந்நிலையில் தற்போது புளோரிடாவுக்குள் இந்தப் புயல் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதேவேளை, மியாமி கடற்கரை மற்றும் கீ பிஸ்கயின் பகுதிகளிலும் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புளோரிடாவில் மையம் கொண்டிருக்கும் ‘இர்மா’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் அடுத்த வாரம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் புளோரிடா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வாழும் சுமார் 56 லட்சம் மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அமெரிக்காவின் பேரிடர் மற்றும் அவசரகால நிவாரண முகாமை வலியுறுத்தியுள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget