ரோஹிங்கிய அகதிகளுக்கு, 2.6 மில்லியன் திர்ஹம் பொருட்களை அனுப்பியது அமீரகம்!


மியான்மார் அரச பயங்கரவாதிகள், பவுத்த பிக்குகள், பொது மக்களின் கூட்டு இனிஅழிப்பு வன்முறையின் காரணமாக ஏராளமான ரோஹிங்கிய முஸ்லீம்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். உயிர் தப்பியவர்களின் வருகை சுமார் 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. மேலும் சுமார் 3 லட்சம் அகதிகள் உதவிகளை எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் அகதிகளுக்கான ஐ.நா ஆணையம்(UNHCR) கேட்டுக் கொண்டதன் பேரில் சுமார் 2.6 மில்லியன் திர்ஹம் பெறுமானமுள்ள 100 மெட்ரிக் டன் எடையுள்ள டெண்டுகளை சிறப்பு விமானம் மூலம் பங்களாதேஷின் 'குட்டுபலோங்' அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் 1,671 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8,355 பேர் பயனடைவர்.

கடந்த ஞாயிறு அன்று முதலாவது விமானம், 91 மெட்ரிக் டன் எடையுள்ள ஜெர்ரி கேன்கள், பாய்கள், போர்வைகள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சுமந்து சென்றது. இதன் மூலம் சுமார் 175,000 அகதிகள் பயனடைவர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget