மியான்மரில் 100 இஸ்லாமியர்கள் கொலை - அகதிகளாக ஓடும் மக்கள்!

மியான்மரில் வெடித்த வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ராக்கைன் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு, ஏ.ஆர்.எஸ்.ஏ எனப்படும் Arakan Rohingya Salvation Army உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் அதா உல்லா. இந்த அமைப்பு, மியான்மர் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்திவருகிறது.

ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களைப் பாதுகாப்பது நோக்கம் என இந்த அமைப்பு கூறுகிறது. அதா உல்லா, பாகிஸ்தானில் பிறந்து சவுதி அரேபியாவில் வளர்ந்தவர், ஜிகாத் அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்று மியான்மர் அரசு குற்றம் சாட்டிவருகிறது. மியான்மரில் இருந்து ராக்கைன் மாநிலத்தைப் பிரித்து, தனிநாடாக உருவாக்க முயற்சி செய்வதாக மியான்மர் அரசு இந்த அமைப்பு மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு. மேலும், ரோகிஞ்சா மக்கள் வங்கதேசத்திலிருந்து மியான்மருக்குள் அத்துமீறிப் புகுந்தவர்கள் எனக் கூறி, அவர்களுக்கான உரிமைகளை வழங்க மியான்மர் அரசு மறுத்துவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவினர் ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்,12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. ராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில், 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள், ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, மியான்மர் ராணுவத்தினர் தீ வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து, உயிருக்குப் பயந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள், வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மிஷோரத்தில் உள்ள சிஷா பகுதிக்கு நேற்று வந்த மியான்மர் அகதிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1990-ம் ஆண்டு முதல் ராக்கைன் மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறை நடந்துவருகிறது. ஏற்கெனவே, வங்கதேசத்தில் 4 லட்சம் ரேகிஞ்சா இஸ்லாமிய மக்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கட்டுப்படுத்த, ஐ.நா., தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வங்கதேசம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்ட, பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் வன்முறையை செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு ஆராய்ந்துவருவதாக, ஐ.நா. மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget